உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சங்ககிரி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சங்ககிரி: சங்ககிரி மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. சங்ககிரி அருகே, புதுவளவு மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், மாரியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு, நாளை, கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை, 7:30 மணிக்கு, காவிரி தீர்த்தம் கொண்டு வருதல் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு மேல், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்து, காவிரி தீர்த்தக்குடங்களுடன் முளைப்பாரி எடுத்து வருதல், விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி யாக பூஜை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மேல் பிரதிஷ்டை செய்தல் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு மேல், கங்கனம் கட்டுதல், யாக பூஜை, தீபாராதனை, கலசம் புறப்பாடு நடந்து, 8:30 மணிக்குமேல், 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !