தீவனூர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3156 days ago
திண்டிவனம் : தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை ௪:௦௦ மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு ௭:௦௦ மணிக்கு, சித்தி புத்தி சமேத பொய்யாமொழி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலரின் அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.