உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்டில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர், வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. இதில் தினமும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு, ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் மற்றும் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !