பத்தமடை கோயிலில் 26ம் தேதி கந்தசஷ்டி விழா துவக்கம்!
ADDED :5199 days ago
வீரவநல்லூர்: பத்தமடை வில்வநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 26ம் தேதி துவங்கி ஏழு நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை யாகசாலை பூஜை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. கந்தசஷ்டியன்று காலையில் பால்குடம், காவடி, வீதிஉலா, மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. அடுத்தநாள் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.