பெ.நா.பாளையம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3155 days ago
பெ.நா.பாளையம்: விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம், கோட்டக்கரை மைதானத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. காலை, 10:00 மணியளவில், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். அதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.