ஜலகண்டாபுரம் ஓங்காளியம்மன் தீ மிதி விழா கோலாகலம்
ADDED :3155 days ago
ஜலகண்டாபுரம்: ஓங்காளியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்தனர். ஜலகண்டாபுரம் அடுத்த, செலவடை ஓங்காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 7ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று, ஓங்காளியம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலி கொடுத்து, மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், எட்டு நாட்களாக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.