மேல்மலையனூர் கோவில் திருவிழா வாகன நிறுத்தம் குறித்து ஆலோசனை
ADDED :3155 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு திருவிழாவின் போது வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், நாளை நடக்கிறது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் விழா, இம்மாதம் 24ம் தேதி துவங்குகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் வரும் கார், வேன், பஸ், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. எனவே மேல்மலையனுாரில் சாலை ஓரங்களில் நிலம் வைத்திருப்பவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இது குறித்த கூட்டம் நாளை (18 ம் தேதி) காலை 11:00 மணிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்க உள்ளது. இதில் நிலத்தின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும்படி, செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.