சோழவந்தான் வீரகாளியம்மன் கோயில் மாசி உற்சவம்
ADDED :3155 days ago
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை வீரகாளியம்மன் கோயில் மாசிமாத உற்சவம் மகாபிஷேகத்துடன் நிறைவுற்றது. பிப்.,1ல் யாகபூஜையுடன் துவங்கியது. பிப்.,7ல் கொடியேற்றத்துடன் மாசிமாத உற்சவம் துவங்கியது. பிப்.,13ல் பூச்சொரிதல் விழா, பிப்.,14 ல் பால்குடம் விழா நடந்தது. பக்தர்கள் அம்மனுககு பொங்கல் படைக்க, அன்னதானம் வழங்கப்பட்டது. அன்றிரவு 7:00 மணிக்கு விளக்குபூஜை, நேற்று காலை சப்பரத்தில் அம்மன் வீதிஉலா, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வைகையில் கரைத்தனர். இரவு மகாபிஷேகத்துடன் உற்சவம் நிறைவுற்றது.