வீரராகவர் கோவிலில் கனகவல்லிக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :3213 days ago
திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், மாசி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, கனவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாசி மாதம், முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கனகவல்லி தாயாருக்கு காலை, 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர், கனகவல்லி தாயார் உள்வீதி புறப்பாடு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை வழிபட்டனர். குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், மகாலட்சுமி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.