உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

எரியோடு: எரியோடு பேரூராட்சி சின்னகுட்டிபட்டி, பாகாநத்தம் ஊராட்சி துாங்கனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்த குடங்கள், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் முடிந்ததும் கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நாகையகோட்டை பெருமாள் கோயில் அர்ச்சகர் குமார் நடத்தி வைத்தார்.  எரியோடு திருவருள்பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, கோயில் திருப்பணி பொறுப்பாளர்கள் வேல்முருகன், போசப்பன் உள்பட கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !