உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பூர் அருகே பரபரப்பு: வில்வனேஸ்வரர் கோவில் சிலையை திருட முயற்சி

வேப்பூர் அருகே பரபரப்பு: வில்வனேஸ்வரர் கோவில் சிலையை திருட முயற்சி

வேப்பூர்: வேப்பூர் அருகே வில்வனேஸ்வரர் கோவில் சிலையை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வேப்பூர் அடுத்த நல்லுாரில் பிரசித்தி பெற்ற வில்வனேஸ்வரர் கோவிலில் 100க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன. பூசாரி சாம்பசிவம் கடந்த 17ம் தேதி இரவு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 6:00 மணியளவில் வந்து பார்த்தபோது, கோவிலில் நடன விநாயகர் சிலை, பெரிய நாயகி, இளயநாயகி அம்மன் சிலைகளின் பீடம் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் விசாரணை செய்ததில், மர்ம நபர்கள் சிலைகளை திருட முயன்றுள்ளது தெரிய வந்தது. இந்த கோவிலில் இருந்த 12 சிலைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது. அவற்றை கைப்பற்றி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோவிலில் சிலைகள் திருட முயன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !