ஆழத்து விநாயகர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3262 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் மாரச் மாதம் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. அதை முன்னிட்டு, கிராம தேவதைகளான செல்லியம்மன், அய்யனார் சுவாமிகள் உற்சவம் கடந்த 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, ஆழத்து விநாயகர், பழமலை நாதருக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 1:15 மணியளவில் ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.