தாரமங்கலம் சிவலிங்கம் மீது சூரியஒளி
ADDED :3150 days ago
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு, சிவலிங்கம் மீது, சூரியஒளி படுவது தெரியும். இந்நிகழ்ச்சியை, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த பலர் கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்வர். மூன்று நாட்களில், முதல் நாளான நேற்று மாலை, சிவலிங்கத்தின் மீது சூரியஒளி படுவதை காண்பதற்காக, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மாலை, 6:10 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியஒளி படுவது தெரிந்தது. பக்தர்கள் சிவநாமம் கூறி கோஷமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று, சிவலிங்கத்தின் மத்தியில் சூரியஒளி படாததால், மூன்றாம் நாளான நாளை, சிவலிங்கத்தின் மத்தியில் சூரியஒளி படுவது நன்றாக தெரியும்.