பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் சாட்டும் விழா
பழநி, பழநி கிழக்குரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிப்.,17 முதல் மார்ச் 9 வரை 21 நாட்கள் மாசித்திருவிழா நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம்சாட்டும் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு திருக்கம்பத்திற்கு காணியாளர் ஒருவரால் அரிவாள் எடுத்து கொடுக்கப் பட்டது. காணியாளக் கவுண்டருக்கும் மரியாதை செய்து நேற்று அதிகாலை 3:30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் சிறப்பு பூஜைக்குப்பின் கோயில் ன்பகுதியில் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 7ல் திருக்கல்யாணம், அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலிப்பார். மார்ச் 8ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,28 முதல் மார்ச் 9 வரை தினசரி தங்க குதிரை, வெள்ளியானை உள்ளிட்ட பல வாகனங்களில் அம்மன் திருவுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை பழநிகோயில் இணைஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ)மேனகா செய்கின்றனர்.