முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தபசு கோல வழிபாடு
ADDED :3151 days ago
ராமநாதபுரம், ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் சிவராத்திரி விழா பிப்., 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, அம்பாள் வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாளான நேற்று அம்பாள் தபசு கோலத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்., 25 காலை 7:50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 26ல் மஞ்சள் நீராட்டு, 27ல் பால்குட ஊர்வலம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.