உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபகவான் கோவிலில் மஹா சிவராத்திரி

ஆதிபகவான் கோவிலில் மஹா சிவராத்திரி

காஞ்சிபுரம் : ஆற்பாக்கத்தில் உள்ள, 1,008 ஆதிபகவான் திகம்பர சைன கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நாளை கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில், 1,008 ஆதிபகவான் திகம்பர சைன கோவில் உள்ளது. அனைத்து சிவன் கோவில்களிலும், இன்று சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். அதற்கடுத்த நாளில், ஆண்டு தோறும், சைன கோவிலில் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.இதையடுத்து, நாளை காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜையும், சொற்பொழிவும் நடைபெறும். இரவு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை ஆதிபகவான் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் உட்புறத்தில் சுற்றி வருவார். இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவிற்கு, சுற்று பகுதிகளில் உள்ள ஏராளமான சைன மதத்தை சேர்ந்தோர் பங்கேற்பர். இதற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !