உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள்வெளி சித்தர் பாபா மஹா ஜீவசமாதி கோவில் கும்பாபிஷேக விழா

அருள்வெளி சித்தர் பாபா மஹா ஜீவசமாதி கோவில் கும்பாபிஷேக விழா

வடமங்கலம் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்து அமைந்துள்ளது வடமங்கலம் கிராமம். இங்கு, அருள்வெளி சித்தர் பாபா மஹா ஜீவசமாதி கோவில் அமைந்துள்ளது. அண்மையில், புதிதாய் ஜீவ சமாதி கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இதை அடுத்து மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !