உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா கோலாகலம்!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா கோலாகலம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்களை கொட்டி அம்மனை தரிசித்தனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் நேற்று பூத்தமலர் பூ அலங்கார விழா நடந்தது. இன்று, பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. அம்மன் பூத்தேரில் எழுந்தருளினார். தேர், மேற்குரத வீதி, கலைக்கோட்டு விநாயகர்கோயில், பென்ஷனர் தெரு, கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாக உலா வந்தது. அம்மனை, பக்தர்கள் உதிரிப்பூக்களை கொட்டி தரிசித்தனர்.  அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !