உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டியில் மகா சிவராத்திரி மஞ்சள் பால் குட ஊர்வலம்

கோவில்பட்டியில் மகா சிவராத்திரி மஞ்சள் பால் குட ஊர்வலம்

துாத்துக்குடி: கோவில்பட்டியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் பெண்கள் மஞ்சள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.  

கோவில்பட்டி மாதங்கோயில் சாலையில் உள்ள  குருநாதர் சமேத  அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் உள்ளது.  மாசி மகா சிவராத்தி விழா பிப்., 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் பால்குட ஊர்வலம் நடந்தது. அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூனைகள் நடந்தது. அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சள் பால்குட ஊர்வலம் துங்கியது. இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் கலந்த பாலில் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !