உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பகுதிகளில் சிறப்பு மகா சிவராத்திரி

கள்ளக்குறிச்சி பகுதிகளில் சிறப்பு மகா சிவராத்திரி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு மகா சிவராத்திரி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிப்24, காலை மகாசிவராத்திரியை முன்னிட்டு, பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜைகள் நடத்திய பின் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட 25 முகங்கள், 50 கரங்கள் கொண்ட சாம்பசதாசிவ பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று(௨௫ம் தேதி) விடியற்காலை 6:00 மணிவரை, மங்கள பொருட்களை கொண்டு நான்கு கால அபிஷேகமும், சிவனுக்கு ருத்திர மந்திரங்களால் பூஜைகள் நடத்தினர்.

அலங்கார தீபங்கள் காண்பிக்கப்பட்டு, மந்திர உபச்சாரமும் நடந்தது. இதேபோல், கமலா நேரு தெரு, நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், செம்பொற்சோதிநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதீஸ்வரர், தண்டலை ஆதிநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு மகாசிவராத்திரி உற்சவம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். சின்னசேலம் பகுதியிலுள்ள தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு மகாசிவராத்திரி வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !