காளியம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை
ADDED :3147 days ago
செவ்வாய்ப்பேட்டை: காளியம்மனுக்கு, 108 திருவிளக்கு பூஜை செய்து, பெண்கள் வழிபட்டனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் மாசி பெருவிழா, கடந்த, 14 இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு மேல் அபிஷேகம், மகா தீபாராதனை செய்து, காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:00 மணியளவில், காளியம்மன் பக்தி பாடல் குழுவினர் சார்பில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. வேதமந்திரம் முழங்க, பெண்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தி, அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வந்தார்.