திருக்குடும்ப தேவாலய திருப்பலி, தேர்ப்பவனி
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், திருக்குடும்ப தேவாலயம் சார்பில், திருப்பலி மற்றும் தேர்ப்பவனி நிகழ்ச்சிகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டையில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தின், 28வது ஆண்டு விழா முன்னிட்டு, திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கடந்த, 23ல் அற்புத குழந்தை ஏசு தேர்ப்பவனி மற்றும் கொடி பவனியுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 24ல் மாதா கோவில் தெரு மற்றும் கடைவீதி வழியாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், ஆடம்பரத் தேர்ப்பவனி, திவ்யநற்கருணை ஆசீர்வாதம் மற்றும் கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வேடசந்தூர் பங்கு சந்தை ஸ்டீபன் கஸ்பார், குளித்தலை பங்கு தந்தை தாமஸ் ஞானதுரை உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, திருக்குடும்ப தேவலாய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.