உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் சிவராத்திரி வழிபாடு நிறைவு

சதுரகிரி மலையில் சிவராத்திரி வழிபாடு நிறைவு

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி வழிபாடு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா பிப். 24 ல் துவங்கியது. அன்று அதிகாலை முதல் மலைப்பாதை திறந்து விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மலைக்கு தினமும் சென்றுவந்தனர். அன்று இரவு முதல் பிப் 25 வரை இருநாட்கள் சிவராத்திரி வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு மாசிமாத அமாவாசை வழிபாடு நடந்தது. சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், சித்தர்கள் வழிபாடு, சங்கொலி பூஜைகள் நடந்தன. அத்துடன் சிவராத்திரி விழாவிற்கான நிறைவு பூஜைகள் நடந்தன. நள்ளிரவு வரை தொடர்ந்த இப்பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மலையில் தங்கியிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !