திருவானைக்காவலில் 79ம் ஆண்டு யாகம் நிறைவு
ADDED :3145 days ago
சென்னை: சென்னை, ஆதம்பாக்கம், திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் வேதபாராயண ரிலிஜியஸ் டிரஸ்ட் சார்பில், 79ம் ஆண்டு யாகம், சதுர்வேத பாராயணம் மற்றும் மஹா ருத்ரம், திருவானைக்காவலில் சிறப்பாக நடந்தது. திருவானைக்காவல், சுமங்கலி மகாலில், கடந்த மாதம், 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, சதுர்வேத பாராயணமும், மஹா ருத்ரமும் நடைபெற்றது. பிப்., 15ல் நடந்த வேத தேர்வில் தேர்வான, ஆறு பேர் கவுரவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு, 80வது ஆண்டு பாராயணம், திருக்கடையூரில் நடைபெற உள்ளது.