உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மகா மக குளத்தில் 11ல் தீர்த்தவாரி

கும்பகோணம் மகா மக குளத்தில் 11ல் தீர்த்தவாரி

தஞ்சாவூர்: - கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, நாளை அனைத்து சிவாலயங்களிலும், 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு மகா மக விழாவாக கொண்டாடப்படுகிறது. 2016ல் மகா மக விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, மாசி மக விழாவில் சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி 10 நாள் உற்சவம் நடைபெறும். இதையடுத்து, நாளை மகா மகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 5ல், அறுபத்து மூவர் வீதிவுலாவும், 9ல், ஐந்து தேரோட்டமும், 11ல், மகா மக குளத்தில் காலை, 10:30 மணி - 12 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

வைணவத் தலங்கள் : மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் நாளை மறுநாள், 3ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ௧௦ நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !