உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம முனீஸ்வரர் கோயிலில் சமபந்தி திருவிழா

தர்ம முனீஸ்வரர் கோயிலில் சமபந்தி திருவிழா

முதுகுளத்துார்;முதுகுளத்துõர் அருகே தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முதுகுளத்துõர் அருகே கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிக்களரி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு தர்ம முனீஸ்வரருக்கு நேர்த்தி கடனாக பக்தர்கள் 102 கிடாய்கள் வழங்கினர். இவற்றை வெட்டி சமையல் செய்து பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.  இதுகுறித்து கீழச்சாக்குளம் பெரியகருப்பணன் கூறுகையில்,“ தர்ம முனீஸ்வரருக்கு பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கும் கிடாய்களை வெட்டி சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசிக்களரி திருவிழாவில் இந்தாண்டு நேர்த்திகடனாக அதிக ஆடுகள் வழங்கபட்டுள்ளது, எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !