உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் கோவிலில் ஜூன் 4ல் கும்பாபிஷேகம்

மடப்புரம் கோவிலில் ஜூன் 4ல் கும்பாபிஷேகம்

திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேட்ட வரம் கொடுப்பவள் என்பதால் பலரும் அம்மனை தரிசிக்க வருகை தருவது வழக்கம்.அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்தது. பக்தர்கள் தரப்பில் கூறுகையில்,“ பாலாலயம் நடந்து ஒரு வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.மடப்புரம் கோயிலில் அய்யனாருக்கு பாலாலயம் நடந்து ஏழு வருடமும்,அம்மனுக்கு பாலாலயம் நடந்து இரண்டு வருடமும் ஆகிவிட்டது. தற்போது வரும் மே மாதம் 29ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குவதாகவும் ஜூன் 4ம் தேதி கும்பாபிஷேகம் பிள்ளையார்பட்டி தலைமை அர்ச்சகர் பிச்சை குருக்கள் தலைமையில் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். இந்த முறையாவது திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றனர். செயல் அலுவலர் இளையராஜாவிடம் கேட்ட போது, கும்பாபிஷேகம் நடத்த தேதி நிர்ணயம் செய்து அறநிலையத்துறைக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து உத்தரவு வந்த பின் இறுதி தேதி அறிவிக்கப்படும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !