சின்னாளபட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3140 days ago
சின்னாளபட்டி, சின்னாளபட்டி அண்ணா மார்க்கெட் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில், பிருந்தாவன தோப்பில் கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.