உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன்

கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களில் நேற்று சாம்பல்புதன் துவங்கியது. இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல்புதன் முதல் 40 நாட்கள் நோன்பு இருந்து தவவாழ்வு, அறவாழ்வு, ஜெபவாழ்வு மேற்கொள்வர். இதில் வரும் ஏழு வெள்ளியன்றும் இயேசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்துவர். சாம்பல்புதனை முன்னிட்டு விருதுநகர் புனித இன்னாசியர் ஆலயத்தில் நேற்று விருதுநகர் மறை வட்ட அதிபர் ஞானபிரகாசம், துணைபங்குத் தந்தை தாமஸ் வெனிஸ் ஆகியோர், சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவகாலத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன. இது போல் பாண்டியன்நகர் சவேரியார் ஆலயத்தில் பங்குதந்தை ஆரோக்கிய செல்வம், விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளி பொருளாளர் அந்தோணிராஜ், திருச்சி அலோசியஸ் துவக்கி வைத்தனர்.ஆர்.ஆர். நகரில் பங்கு தந்தைபெனடிக் பர்னபாஸ் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !