காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.37 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :3140 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. அதில், ரொக்கப் பணம், 37 லட்சம் ரூபாய் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின், நேற்று காலை அக்கோவில் உண்டியல்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர், ரமணி மற்றும் கோவில் செயல் அலுவலர், விஜயன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. ரொக்கமாக, 37 லட்சம் ரூபாய், 176 கிராம் தங்கம், 173 கிராம் வெள்ளி கிடைத்தது. இதில், செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கிடந்தன.