உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா

காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா

மேட்டுப்­பாளையம்:  காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா வரும், 4ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்த்திருவிழா வரும், 4ம் தேதி இரவு கிராமசாந்தியுடன் துவங்குகிறது. 5ம் தேதி கொடியேற்றமும், இரவு அன்­னவாகன உற்சவமும் நடைபெற உள்ளன. 6ம் தேதி சிம்மவாகனம், 7ம் தேதி அனுமந்த வாகன உற்சமும், 8ம் தேதி கருடசேவையும், 9ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும் நடைபெறுகிறது. விழா துவங்கி ஏழாம் நாள் (10ம் தேதி) காலை, 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் உற்சவமும் நடைபெறுகிறது. 11ம் தேதி காலை , 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப்பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 3:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 12ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை உற்சவமும், 13ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், 14ம் தேதி சந்தான சேவை சாற்றுமுறை உற்சவம் பூர்த்தியும், 15ம் தேதி விழா நிறைவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !