உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் இன்று திருத்தேர் உற்சவம்

மேல்மலையனூர் கோவிலில் இன்று திருத்தேர் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த மாதம் 24ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி மயானக்கொள்ளையும், 28 ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. 7 ம் நாள் விழாவாக இன்று (2 ம் தேதி) மாலை 5 மணிக்கு முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்குகின்னறர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !