உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு மணப்புள்ளிக்காவு அம்மன் கோவில் திருவிழா

பாலக்காடு மணப்புள்ளிக்காவு அம்மன் கோவில் திருவிழா

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மணப்புள்ளிக்காவு அம்மன் கோவில் திருவிழா, நேற்று யானைகள் அணிவகுப்புடன், விமரிசையாக நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மூலஸ்தான கோவில் அமைந்துள்ள படிஞ்சாரை யாக்கரை கோவிலிருந்து, அம்மன் எழுந்தருளல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, பஞ்சவாத்தியங்கள் முழங்க, அம்மன் யானை மீது அமர்ந்து வீதியுலா வந்தார். தொடர்ந்து, பாலக்காடு கோட்டை மைதானத்தில், 15 யானைகளின் அணிவகுப்பு மற்றும் வண்ணக் குடைமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இரவு வாண வேடிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !