புனித யாத்திரைக்கு அரசு மானியம்
ADDED :3207 days ago
சென்னை: சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்று வந்தவர்களில், தலா, 250 பேருக்கு, தமிழக அறநிலையத் துறை மானியம் வழங்குகிறது. இந்த நிதியாண்டில், மானசரோவர் சென்றவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய்; முக்திநாத் சென்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல், 70 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயண விபரங்களுடன், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, தீதீதீ.tணடணூஞிஞு.ணிணூஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ’ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, சென்னை - 34’ என்ற முகவரிக்கு, ஏப்., 30க்குள் அனுப்ப வேண்டும்.