ஆர்.கே.பேட்டை சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம்
ADDED :3134 days ago
ஆர்.கே.பேட்டை : வியாழக்கிழமையையொட்டி, சாய்பாபாவுக்கு நேற்று, சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது சாய்பாபா கோவில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நேற்று, காலை 11:00 மணிக்கு, சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதேபோல், பத்மாபுரம் அடுத்த, சாய்நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், நேற்று, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.