செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்
ADDED :3134 days ago
சேலம்: காளியம்மன் கோவில் தீ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவிலில், கடந்த, 8ல் பொங்கல் பண்டிகையுடன் திருவிழா துவங்கியது. அதில், நேற்று நடந்த விழாவில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட பலர், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று, சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.