உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்னேரியில் நாளை தெப்போற்சவம்

தென்னேரியில் நாளை தெப்போற்சவம்

தென்னேரி: தென்னேரியில், 92வது ஆண்டு தாதசமுத்திர தெப்போற்சவம், நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 92வது ஆண்டு தொப்போற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்­ணாடி பல்லக்கில் எழுந்தருளி தென்னேரி, அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று இரவு தென்னேரி கிராமத்திற்கு வந்தடைவார். அங்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதன் பின், இரவு, 7:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி ஏரி தெப்பலில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். தெப்போற்சவ ஏற்பாடுகளை, ராஜரத்தின நாயுடு வகையறாவில், பாபு நாயுடு செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !