காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேகம் நடந்து வருவதால், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. உலகளவில் பிரசித்தி பெற்று விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பாக்கப்பட்டன. நெரிசலை தவிர்க்கும் வகையில், கூட்டம் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. அதனால் கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தால் நல்லது என, பக்தர்கள் கருதி அதிகம் வருகின்றனர். வழக்கம்போல் தரிசனம் காலை , 5:30 மணி முதல், 12:30 வரையிலும், மாலை , 4:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடந்து வருகிறது. கும்பாபஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இப்போது வருவதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வரும், 30ம் தே தி வரை மண்டலாபிஷேக பூஜை நடைபெறுகிறது. அது வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என, கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் இலவச பொது தரிசனம். வி.ஐ.பி.,க்க ளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்க ப்படுகிறது.