உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில் கும்பாபிஷேகம்

ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில்களான கிழக்கு ரதவீதி, பழைய போலீஸ் லைன் தெருவில் உள்ள சம்பந்த விநாயகர், வீரபத்திரசுவாமி கோயிலில் 5 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரு கோயில்களிலும் முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 2ம் கால யாகசால பூஜை முடிந்ததும், கோயில் குருக்கள் கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பின், அங்கு கூடியிருந்த பக்தர் மீது புனித நீரை தெளித்தனர். சம்பந்த விநாயகர், வீரபத்திரசுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கர்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !