இளமையோடிருக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED :5299 days ago
ஓரடி நடவேன் ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன் படுத்து உறங்கேன்
என் உடலின் நிழல் கால் அளவில் ஒரு அடியாக இருக்கும் நேரமாகிய உச்சிப் பொழுதில் வெளியே திரிய மாட்டேன். ஈரமான இடங்களில் நடக்க மாட்டேன். ஏற்கனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்க மேலும் உண்ண மாட்டேன். தூக்கம் வராமல் படுக்கைக்கு செல்ல மாட்டேன். இதுவே இளமையோடிருக்க காரணம்.