உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவொற்றியூர் தியாகராய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் தியாகராய சுவாமிகள் வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலங்காரத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் இரவில் தியாகராஜ சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மார்.09ல்) கோலாகலமாக நடைபெற்றது.  சங்குகள் முழங்க, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் தேர் வீதி வீதியாக வலம் வந்தது. தேரோட்டத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து பக்தர்கள், சிவனடியார் குழுக்கள் பங்கேற்றனர். விழாவை தொடந்து திருக்கல்யாணம், 11ம் தேதி காலையும், இரவு மகிழடி சேவை மற்றும் 13ம் தேதி, பந்தம்பறி நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !