உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னுாற்றி இருபது ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் சன்னிதி கோபுரம், சவுமியநாராயண பெருமாள் சன்னதி கோபுரம், வரசக்தி ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. சொர்க்கவாசல் கதவுகள், கொடி மரத்தில் பித்தளை தகடு பதிக்கப்பட்டது. நுழைவுவாயிலில் சாளக்கோபுரம், அருகில் பதினெட்டாம்படியாருக்கு சன்னதி அமைப்பட்டது. மார்ச் 6ல் ஆசார்யவரணம், பகவத் அனுக்ஞை, சாந்தி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 7:00 மணிக்கு ஹோமங்கள், திருமஞ்சனம் நடந்தன. நேற்று காலை 8:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 9:40 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு பெருமாள் திருவீதி உலா நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், துணை ஆணையர் கவிதா, கோயில் அலுவலர் இளங்கோ, சிவகங்கை பிரகாசம் நகைக்கடை உரிமையாளர் பிரகாசம், எஸ்.எம்.,பில்டர்ஸ் உரிமையாளர் சுந்தரமாணிக்கம், காரைக்குடி எம்பி.அக்ஷயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் முகிதன்பாரதி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !