ஸ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
ADDED :3249 days ago
எல்லோருமே ஸ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம் என்பது தவறு. ஸ்ரீசக்ரத்தை வைத்து வழிபடவேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் உண்டு. ஸ்ரீவித்யை அல்லது ஏதேனும் ஒரு அம்பிகை மூலமந்த்ரம் உபதேசம் பெற்றுக் கொண்டு செய்பவர்கள், நவாவரண பூஜையை கிரமமாகச் செய்பவர்கள், நவாவரண பூஜையை கிரமமாகச் செய்பவர்கள் மட்டும்தான் ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இதுமட்டுமல்லாமல், வெறுமனே கிரம பூஜைகள் இன்றி ஸ்ரீசக்ரத்தை பூஜையில் வைத்திருப்பதும் கூடாது.