உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

விழுப்புரம்: விழுப்புரம் கணபதி நகர் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் கே.கே., ரோடு கணபதி நகரில் உள்ள மகா விஷ்ணு, அருணாச்சலேஸ்வரர், விஷ்ணுதுர்கை, தட்சணாமூர்த்தி, பாலமுருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், பரிவார தேவதைகள் சகித கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணி முதல்  10:30 மணிக்குள், கோபுரம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகக்குழு தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் பருத்தி சேகர், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, விழா குழுவினர் மார்கபந்து, சீனுவாசன், புகழேந்தி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !