உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பாண்டாம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்

குப்பாண்டாம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம்: குப்பாண்டாம்பாளையம் ரங்கநாதர் பெருமாள் கோவிலில் நவ., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. பவானி தாலுகா, குப்பாண்டாம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி ஸ்மேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கும்பாபிஷேக பூஜைகள், நாளை காலை 9 மணிக்கு துவங்குகிறது. சேனை நாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வாசுதேவ புண்யாஹம், நவக்ரஹ யாஹம், பூர்ணாஹுதி, தன பூஜை, சாற்றுமறை, தீர்த்தம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பாலிகா ஸ்தாபனம், அங்குரார்பணம், காப்பு கட்டுதல், முதற்கால ஹோமம், தீபாராதனை நடக்கிறது. நவ., 1ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, பாராயணம், இரண்டாம் கால யாஹபூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாஹபூஜை, மூலமந்தர ஹோமம், தீபாராதனை, சாற்றுமறை, இரவு 7 மணிக்கு கோபுர கலசம் நிறுவுதல், இரவு 8 மணிக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நவ., 2ம் தேதி காலை 7.30 மணிக்கு மண்டல ஆராதனம், நான்காம் கால பிராண பிரதிஷ்டை ஹோமங்கள், நாடீஸந்தானம், மகா பூர்ணாஹுதி, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் தசதரிசனம், தசதானம், மகாதிருமஞ்சனம், அலங்காரம், மகாதீபாராதனை, சாற்றுமறை, புஷ்பாஞ்சலி, அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !