தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5133 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளியிலுள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளியில் பெரிய விநாயகர் கோவில் அருகில் புதிதாக தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதையடுத்து, நவம்பர் 7ம் தேதி கும்பாபிஷேக நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 5.00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 7ம் தேதி, காலை 9.00 மணிக்கு தன்வந்திரி ஹோமம், விமான கலச கும்பாபிஷேகம், தர்மசாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.