கொளஞ்சியப்பருக்கு சந்தனகாப்பு அலங்காரம்!
ADDED :5133 days ago
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி கொளஞ்சியப்பர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விருத்தாசலம் மண வாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்த சஷ்டி துவக்க விழா நேற்று முன்தினம் துவங்கியது. அதையொட்டி கொளஞ்சியப்பருக்கு மஞ்சள், பால், தேன் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நேற்று கொளஞ்சியப்பருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.