உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆற்றுக்கால் பொங்கல் விழா

இன்று ஆற்றுக்கால் பொங்கல் விழா

நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுக் கால் பொங்கல் விழா இன்று நடக்கிறது. மதுரையை எரித்த கண்ணகி, கொடுங்கல்லுார் செல்லும் வழியில், திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கினார்.முதியவர் கனவில் வந்து சொன்னதன்படி, இங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மன் என பெயரிடப்பட்டது. இங்கு திருவிழாவின் போது, கண்ணகி தோற்றம் பாட்டு பாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா, மார்ச், 3ல் துவங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:45 மணிக்குஅடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கலிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !