உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலகட்டம்மன் குளம்: சீர் செய்யும் பணி துவக்கம்

மேலகட்டம்மன் குளம்: சீர் செய்யும் பணி துவக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பகுதியில் வண்ணாரக்குளத்தை தொடர்ந்து, மேலகட்டம்மன் கோவில்குளம் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சியில் நிலத்தடி நீர் ஆதார குளங்களாக, கடந்த காலத்தில் பல இடங்களில் குளங்கள் அமைக்கப்பட்டன. உத்திரமேரூர் ஏரியில் இருந்து, மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீர் அப்பகுதியில் உள்ள , 54 குளங்களை நிரம்ப செய்யும் வகையில் நீர் வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு குளங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் துர்ந்து கிடந்ததால், உத்திரமேரூரில் நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சிக்கு சொந்தமான ஐந்து குளங்களை துார் வாரி, சீர் செய்துதர, பேரூராட்சியோடு இணைந்து, நீர் நிலை பாதுகாப்பு என்ற தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அதன்படி, வண்ணாரக்குளம் துார்வாரி புதிய தோற்றத்தில் சீர் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, மேலகட்டம்மன் கோவில் குளம் சீரமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !