உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் கௌரபூர்ணிமா விழா கோலாகலம்

மதுரை இஸ்கான் கோயிலில் கௌரபூர்ணிமா விழா கோலாகலம்

மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரேகிருஷ்ணா கோயிலில், மார்ச் 12 ஞாயிறு அன்று ஸ்ரீசைஉதன்ய மஹாபிரபு அவதாரதிருவிழா, மஹா அபிஷேகம் மற்றும் ஹரிநாமசங்கீர்த்தனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கௌரபூர்ணிமா அலங்காரத்தில் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருவிக்ரஹங்களுக்கு பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மஹா அபிஷேகங்கள் நடந்தன. தவிரகும்ப ஆரத்தியும், 81 தீப விசேஷ ஆரத்தியும்நடைபெற்றது.

இஸ்கான் மதுரைகிளையின் தலைவர் அருட்திரு.சங்கதாரி பிரபு அவர்கள் கௌரபூர்ணிமா விழாவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து இவர் அளித்த உரையில் கூறியதாவது; “இன்று ஸ்ரீகிருஷ்ணர், பக்தராக அவதரித்த திருநாளாகும். இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘ஸ்ரீசைதன்யர்” எனும் திருநாமத்தில் அவதரித்தார். ஸ்ரீசைஉதன்ய மஹாபிரபு அவதாரம், மிகவும் கருணை பொருந்திய அவதாரம் ஆகும். “ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே, ஹரேராம ஹரேராம, ராம ராம ஹரேஹரே” என்ற பதினாறு வார்த்தைகள் அடங்கிய “ஹரேகிருஷ்ண மஹாமந்திரத்தை’ உச்சரிப்பதன் மூலம் ஒருவர் எல்லா விதமான வெற்றியையும் பெற முடியும் என்று ஸ்ரீசைஉதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார்” என்று அவர் உரையில் பேசினார். முன்னதாக, ஹரேகிருஷ்ண மஹாமந்திரஜப தியானம், ஸ்ரீசைஉதன்யரின் ஷிக்ஷாஷ்டக பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் மதுரை, திண்டுக்கல்,விருதுநகர், பெரியகுளம், சின்னமனூர், தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். நிறைவாக விரதம் இருந்த பக்தர்கள் மஹா அபிஷேக தீர்த்தம் உட்கொண்டு, விரதத்தை நிறைவு செய்தனர். பின்னர் அனைவருக்கும் கௌரபூர்ணிமா மஹா பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !